மிரட்டிய பி.எல்.சந்தோஷ் நடு நடுங்கிய அண்ணாமலை: ஒரே ஓட்டமா சென்னை வந்தது குறித்து பரபரப்பு தகவல்கள்

 

சென்னை: பாஜவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேற்று தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாக பாஜ நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், பாஜ மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் தொகுதிகளுக்கான சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் பேசுகையில், ‘பிரதமர் மோடி அரசின் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர்களுக்கு 5 முறை கூறினேன்.

ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை. தங்களை முன்னிறுத்தி ெகாள்வதிலும், தங்களை நிலை நிறுத்தி கொள்வதிலும் தான் போட்டி போடுகிறீர்கள். கட்சியை வளர்க்க எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இனிமேல் இதுபோன்று நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலையை தான் பி.எல்.சந்தோஷ் மறைமுகமாக எச்சரித்ததாக தகவல் வெளியானது. அதாவது கட்சியில் நடக்கும் கூட்டங்களை அண்ணாமலை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அது கும்பகோணத்தில் நடந்த கூட்டமாக இருக்கட்டும். இப்படி பல்வேறு கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

இதேபோல அண்மையில் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு காலை வரை அவர் சென்னை வரவில்லை. பிற்பகல்வாக்கில் தான் சென்னை வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதை வைத்து தான் பி.எல்.சந்தோஷ் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பயந்து நேற்று 3 மணிக்கு மேல் அண்ணாமலை அவசரம் அவசரமாக சென்னை திரும்பினார். எங்கே கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் கட்சி நடவடிக்கை எடுத்து விடுமோ என்ற பயத்திலும், அவர் மேல் உள்ள வழக்கில் ஏதாவது நடவடிக்கை வந்து விடுமோ என்ற பயத்திலும் தான் அவர் வந்ததாக கூறப்படுகிறது.

அடித்து பிடித்து கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றது தான் பாஜவில் ஹாட் டாப்பிக்கா பேசப்படுகிறது. தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியிலிருநது விலகுவதாக அறிவித்த முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

தேர்தல் வியூகங்கள் குறித்தும் கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் விளக்கினார். அப்போது, தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியது தொடர்பாக தன் கருத்துகளை பி.எல்.சந்தோஷ் முன் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணாமலை பொறுப்பில் இருந்து விலகியதை பற்றி விவாதிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories: