சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி:தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த அறிவிப்பு மதுராந்தகத்தில் வெளியிடப்பட்டது. ஒன்றிய அரசு செல்லக்கூடிய விதிமுறைகளை பின்பற்றக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசாங்கம் விதிமுறைகளை பின்பற்றினால் நிதி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ‘‘கூட்டணி குறித்து தேசியத் தலைமை பேசி வருகிறது. கூட்டணி குறித்து தேசிய தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும்’’ என்றார்.
