நாட்டில் உள்ள ஊரக பகுதிகளுக்கு எந்த வளர்ச்சியும் தேவையில்லையா..? ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: வேளாண், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.60,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கூறினார். ஒன்றிய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.6,985 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.53,067 கோடி நிதி குறைக்கப்பட்டது. நாட்டில் உள்ள ஊரக பகுதிகளுக்கு எந்த வளர்ச்சியும் தேவையில்லையா? ஒன்றிய பாஜக அமைச்சர், அதிகாரிகள் ஆண்டு முழுக்க என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினர். கிராமபுற சாலைத் திட்டத்துக்கு மட்டும் நடப்பாண்டில் ரூ.7,201 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: