பிப்ரவரி 11ல் திருவிடந்தையில் நடக்கும் திமுக மாநாட்டில் காஞ்சி வடக்கு மாவட்டத்தில் இருந்து 30 ஆயிரம் பேர் பங்கேற்கவேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கோவளம் அருகே திருவிடந்தையில் உள்ள கலைஞர் திடலில் வருகிற 11ம்தேதி மாலை 4 மணியளவில் சென்னை-விழுப்புரம் மண்டலத்தில் உள்ள 15 மாவட்டத்தில், 49 சட்டமன்ற தொகுதியில் அடங்கிய BLA-2 – BLC – BDA- BYO ஆகிய வாக்குச்சாவடி குழுவினர் பங்கேற்கும் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் 1,50,000க்கும் மேற்பட்ட BLA-2, வாக்குச்சாவடி நிலைமுகவர்கள், BLC வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், BYO வாக்குச்சாவடி இளைஞரணி அமைப்பாளர்கள், BDA வாக்குச்சாவடி தகவல் தொழில்நுட்ப அணி முகவர்கள் உள்ளிட்ட வாக்குச்சாவடி குழுவினர் பங்கேற்க உள்ளனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக முன்னின்று மாநாட்டை நடத்துகிறது. பிரம்மாண்டமான மேடை அமைத்து 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிகவும் எழுச்சியுடன் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

மாபெரும் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்று வாக்குச்சாவடி குழுவினருக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். திருவிடந்தையில் நடைபெறும் மாநாட்டில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30,000க்கும் மேற்பட்ட BLA-2, BLC, BDA, BYO வாக்குச்சாவடி குழுவினர் அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றிடவேண்டும். திருவிடந்தையே குலுங்கிடும் வகையில் திமுக கொடி ஏந்தி சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும். மாநாட்டில் கலந்துகொள்வது நமது கடமை என்ற உணர்வோடு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து வாக்குச்சாவடி குழுவினர் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மாநாடு நடைபெற்றது இல்லை என அனைவரும் கூறும் வகையில் தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திர சாதனை படைத்திடும். திருவிடந்தையில் நடைபெறும் மாநாடு வருகிற சட்டமன்ற தேர்தலின் முதல் தேர்தல் பரப்புரையாக – வெற்றி மாநாடாக அமைந்து சரித்திரம் படைக்கும். சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் இமாலய வெற்றிக்கு அச்சாரமாக அமையும். மாற்று கட்சியனர் மிரண்டு போகும்வகையில் 2026ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும் என எண்ணும் அளவிற்கு மாநாடு அமையவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: