சட்டீஸ்கரில் ஒரே நாளில் 51 நக்சலைட்டுகள் சரண்

பிஜாப்பூர்: சட்டீஸ்கர்,ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ள பஸ்தார் பிராந்தியத்தில் உள்ள பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் நேற்று 51 நக்சலைட்டுகள் சரணடைந்தனர். போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், பிஜாப்பூர் மாவட்டத்தில் 20 பெண்கள் உட்பட 30 நக்சலைட்டுகள் சரணடைந்தனர். அதே நேரத்தில் சுக்மா மாவட்டத்தில் 14 பெண் உறுப்பினர்கள் உட்பட 21 நக்சல்கள் சரணடைந்தனர்.

Related Stories: