மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மர்ம மரணம் பற்றி பிப்.10 விவரங்களை வௌியிடுவோம்: ரோகித் பவார் தகவல்

புனே: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணத்தில் நிலவும் சந்தேகங்கள் பற்றி வரும் 10ம் தேதி விவரங்களை வௌியிடுவோம் என சரத்பவார் கட்சி எம்எல்ஏ ரோகித் பவார் தெரிவித்துள்ளார். பாராமதியில் நேற்று நடந்த ஜில்லா பரிஷத் தேர்தலில் வாக்களித்த ரோகித் பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அஜித் பவார் கடந்த வாரம் காலமானார்.

அவர் விமான விபத்தில் எப்படி உயிரிரிழந்தார் என்பது பற்றி அனைவரது மனதிலும் நிறைய கேள்விகள், சந்தேககங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வரும் செவ்வாய்கிழமை(பிப்.10) விரிவான விவரங்களை நான் வழங்குவேன். விபத்து ஏன்? எப்படி? நடந்தது தொடர்பாக நான் விவரங்களை வௌியிடுவேன். தேசியவாத காங்கிரசின் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என அஜித் பவார் விரும்பினார் ” என்று கூறினார்.

Related Stories: