சென்னை: சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் களஆய்வு மேற்கொண்டு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி கூறியுள்ளது. இந்த கழிப்பறைகள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளுடன் இந்த கழிப்பிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கழிப்பிடத்திற்கும் தனித்தனியாக பணியாளர்கள் அமர்த்தப்பட்டு சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கழிப்பிடங்களில் மக்களின் கருத்துக்களை பெறவும் குறைகள் இருப்பின் அவற்றை விரைந்து நிவர்த்தி செய்யவும் கியூ ஆர் கோடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
