தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.1,238.19 கோடியில் 9,696 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, பிப்.7: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.1,238.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9,696 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னையில் மீனவர் குடியிருப்பு திட்டப்பகுதியில் ரூ.75.22 கோடி செலவில் கட்டப்பட்ட 520 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்,

செனாய் நகர் பழைய பேருந்து நிலையம் திட்டப் பகுதியில் ரூ.67.87 கோடி செலவில் கட்டப்பட்ட ரூ.396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், செனாய் நகர் நீச்சல்குளம் திட்டப்பகுதியில் ரூ.41.84 கோடி செலவில் கட்டப்பட்ட 280 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், செனாய் நகர் நீச்சல்குளம் பகுதி-2 திட்டப்பகுதியில் ரூ.8.34 கோடி செலவில் கட்டப்பட்ட 56 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப்பகுதியில் ரூ.42.54 கோடி செலவில் கட்டப்பட்ட 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மணலி புதுநகர் பகுதி-7 திட்டப்பகுதியில் ரூ.30.46 கோடி செலவில் கட்டப்பட்ட 200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதி-3 திட்டப்பகுதியில் ரூ.198.32 கோடி செலவில் கட்டப்பட்ட 1568 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 19 திட்டப்பகுதிகளில் ரூ.1238.19 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 9,696 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்,

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், இணை மேலாண்மை இயக்குநர் ப்ரியா ரவிச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: