×

நாடாளுமன்றத்தில் தமிழனாக நல்ல கருத்து பேசியதாக தோன்றுகிறது: கமல்ஹாசன் எம்பி பேட்டி

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்பி, நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் தமிழனாக நான் நல்ல கருத்து பேசியதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள், அதை விவாதிக்கட்டும். விவாதங்கள் தொடர வேண்டும். கூட்டணி எல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பண்ணுவது. ஐடியாலஜி தான் முக்கியம். நான் பேசுவது புரியவில்லை என்று கூறியவர்களுக்கு, ஏற்கனவே நான் பதில் கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kamal Haasan ,Chennai ,Makkal Needhi Maiam party ,Delhi ,
× RELATED தமிழ் மொழியை புறக்கணிப்பதா? ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்