அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ‘‘பாஜவுடன் கூட்டணி வைப்பது தீக்குளிப்பதற்கு சமம்’’ என பேசியிருந்தார். தற்போது, ‘‘தனித்து நின்ற அனுபவத்தால், வேற வழியில்லாமல் கடைசியில் பாஜவுடன் கைகோர்க்கும் நிலைக்கு வந்துள்ளோம். என்ன பண்றது அனுபவம் தான் எங்களுக்கு வழி காட்டுகிறது’’ என பேசியிருக்காரு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறதாம்.
