×

வீடு வீடா நைட்டுல ஆள்பிடிக்கும் அதிமுக

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகவும், 3 முறை அமைச்சராகவும் இருந்தவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா இருந்தபோது ஐவர் அணியில் ஒருவராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், தற்போது திமுகவில் இணைந்துள்ளார். கடந்த 26ம் தேதி செங்கிப்பட்டி தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10,000 பேரை திமுகவில் இணைத்தார்.

இந்நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் களமிறங்கினால், அதிமுகவுக்கு தோல்வி நிச்சயம். எனவே, வைத்திலிங்கத்துடன் திமுகவுக்கு சென்றுள்ள ஆதரவாளர்களை மீண்டும் அதிமுகவுக்கு இழுத்து வாருங்கள். தேவையான பதவிகளை கொடுக்கலாம் என எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவருமான மா.சேகர் மற்றும் மாநகர செயலாளர் சரவணன் ஆகியோர் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

இருவரும், வைத்திலிங்கத்திடம் உள்ள நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், இரவு நேரங்களில் அவர்களது வீட்டிற்கு சென்றும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ஒருவரும் மசியவில்லையாம். அதிமுக எப்படி இருந்த கட்சி. இரவில் சென்று ஆள்பிடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. இது மன வேதனையை தருகிறது என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

Tags : AIADMK ,Vaithilingam ,MLA ,Orathanadu ,Thanjavur district ,Jayalalithaa ,DMK.… ,
× RELATED தமிழ் மொழியை புறக்கணிப்பதா? ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்