தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் வரும் 28ம் தேதி நடக்கவிருந்த மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதனை திருவிழா போல் நடத்த உள்ளோம். இதில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
விஜய்க்கு விதிக்கப்பட்ட வரிக்கான அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர் ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லி வருகிறார். இப்போது தான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இனி நாங்கள் ஒன்று சேர்ந்து அவரை எதிர்த்து டிரம் அடிப்போம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களில் நேரில் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்ய இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
