- திமுகா
- கில்லியூர்
- விளங்கோடு
- ஆதமுக்
- விளவங்கோட்
- கன்னியாகுமரி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திராவிதக்
- இந்திய தேசிய காங்கிரஸ்
- கம்யூனிஸ்ட்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன. திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழ்நாட்டில், இந்த இரண்டு தொகுதிகள் மட்டும் நீண்டகாலமாக இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தேர்ந்தெடுத்து வருகின்றன. இங்கு திமுக, அதிமுக இதுவரை ஒருமுறை கூட வென்றது இல்லை.
வரிசை எண்ணின்படி கடைசி எண்ணை கொண்ட கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தேசியக் கட்சிகளை, குறிப்பாகக் காங்கிரஸை அதிகம் ஆதரிக்கும் வரலாற்றைக் கொண்டது. இத்தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் பலமுறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களே தொடர் வெற்றி பெற்றனர். 2021 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜேஷ்குமார் 1,01,541 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாஜமற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய தேசிய/மாநிலக் கட்சிகளும் இங்கு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வலுவான தளமாக இருந்துள்ளது. கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இங்கு பலமுறை வென்றுள்ளது. பின்னர், இது காங்கிரசின் கோட்டையாக மாறியது. 2011 முதல் 2021 வரை காங்கிரசின் எஸ். விஜயதரணி தொடர்ந்து மூன்று முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.
விஜயதரணி பாஜவில் இணைந்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜ வேட்பாளர் நந்தினி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் நேரடியாகப் போட்டியிடுவதை விட, பெரும்பாலும் தேசியக் கட்சிகளுக்கே (காங்கிரஸ் அல்லது பாஜ) ஒதுக்குகின்றன. இந்தத் தொகுதிகள் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டவை என்பதால், இங்கு எப்போதும் தேசிய அரசியல் விவாதங்களே முன்னிலை பெறுகின்றன.
