- Jawahirullah
- யூனியன் அரசு
- சென்னை
- மனிதநேய மக்கள் கட்சி
- எம் எச் ஜவஹிருல்லா
- சிவகாசி ரெயில் நிலையம்
- விருதுநகர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில், தமிழ்நாட்டின் தாய்மொழியான தமிழ் மொழியை இரண்டாம் நிலைக்கு தள்ளி, இந்தி மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்துகிறது. இது தமிழ்மொழிக்கு நிகழ்த்தப்படும் வெளிப்படையான அவமதிப்பாகும்.
இனிவரும் காலங்களில், தமிழ்நாட்டில் உள்ள எந்த ரயில் நிலையத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படக்கூடாது. பெயர்ப்பலகைகள் உள்ளிட்ட அனைத்து பொது அறிவிப்புகளிலும் தமிழ் மொழிக்கு உரிய முதலிடம் வழங்கப்பட வேண்டும். தெற்கு ரயில்வே மேற்கொண்டு வரும் இந்தி திணிப்பு முயற்சிகளை கடுமையாக கண்டிக்கிறோம். தமிழ் மொழி உரிமைக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் எதிராக மக்கள் ஒன்றுபட்டு உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.
