குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 9 மாவட்டங்களில் பனிமூட்டம்

சென்னை: குமரிக் கடல், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படுவதுடன், வட தமிழகம் மற்றும் 9 மாவட்டங்களில் அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். அத்துடன் வட தமிழக கடலோர மாவட்டங்கள், நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும். 9 மற்றும் 10ம் தேதிகளில் நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈ ரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனி மூட்டம் காணப்படும்.

Related Stories: