மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தகவல்!

 

மதுரை: பிப்.28ல் (சனிக்கிழமை) மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை பரபரப்பாக நடத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக கைகோர்த்துள்ளது. இந்த கட்சிகள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த மாதம் ஜனவரி 23ம் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், பிப்.28ல் (சனிக்கிழமை) மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜன. 23ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

 

Related Stories: