திருவாலங்காடு அருகே குடியிருப்பு பகுதியில் குப்பையை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

திருத்தணி, பிப்.5: திருவாலங்காடு அருகே நல்லாட்டூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் குப்பையை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் ஊராட்சி, நல்லாட்டூர் காலனியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் குப்பை கழிவுகள் கொட்ட போதிய குப்பைத் தொட்டிகள் ஏற்படுத்தாத நிலையில், கிராம மக்கள் சாலைக்கு அருகில் பேருந்து நிழற்குடை பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுகின்றனர். சாலை முழுவதும் சிதறும் குப்பை கழிவுகளை அவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால், புகை மண்டலம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. வீடுகள், அங்கன்வாடி, பள்ளி, சாலை அமைந்துள்ள பகுதியில் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகள், பெண்கள் உடல்நிலை பாதிக்கப்படுகின்றனர். கிராமத்தில் சுகாதாரம் தூய்மை உறுதிப்படுத்தும் வகையில், ஊராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் அமைத்து முறையாக பொதுமக்களிடமிருந்து தூய்மை பணியாளர்கள் குப்பைகள் பெற்று சுகாதாரம் தூய்மை உறுதிப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: