பூந்தமல்லி அருகே மாட்டுத் தொழுவமாக மாறிய இணைப்பு சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இணைப்புச் சாலை மாட்டுத் தொழுவமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையின் இரண்டு புறமும் கிராம மக்கள் சென்று வரும் வகையில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் பகுதியில் இணைப்பு சாலை மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் சாலையில் தேங்கியுள்ள மாட்டுச்சாணத்தால் ஏற்படும் துர்நாற்றத்தால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இணைப்பு சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் மழை மழைக்காலங்களில் விபத்தில் சிக்கிக் கொண்டு கடுமையான போக்குவரத்து ஏற்படும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மாட்டு தொழுவமாக மாறியுள்ள வரதராஜபுரம் பகுதியில் இணைப்பு சாலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: