கோத்தகிரி பிரதான சாலையில் முட்புதர்கள் அகற்ற நடவடிக்கை

கோத்தகிரி, ஜன. 26: கோத்தகிரி அரசு மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலையோர பகுதியின் பிரதான சாலையில் முட்புதர்கள் வளர்ந்துள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் நகர்ப்புற பகுதியான மாதா கோயில் செல்லும் சாலையில் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் காட்டு மாடு, கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு தினமும் அதிகமான பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைக்கு வந்து செல்கின்றனர். கிறிஸ்தவ தேவாலயம் அங்கு உள்ளதால் பொதுமக்கள் திருப்பலி சமயத்தில் அவ்வழியாக இரவு நேரங்களில் பயணிக்கின்றனர். தற்போது சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் சாலையில் பயணிக்க மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: