பந்தலூரில் தேசிய வாக்காளர் தின பேரணி

பந்தலூர், ஜன.26: பந்தலூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜாரில் தேசிய வாக்களர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்களர்களின் உறுதிமொழி ஏற்பு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், பந்தலூர் தாசில்தார் சிராஜுன்னிசா, தனி வட்டாட்சியர் செந்தில்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் சக்கீர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பொன்னரசு மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: