அன்புமணி தலைமையில் வரும் 10ம் தேதி பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம்

சென்னை: பாமக தலைமை அலுவலகம் (அன்புமணி தரப்பு) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாமக இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் வரும் 10ம்தேதி செவ்வாய்க்கிழமை, சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறும்.

இளைஞரணித் தலைவர் முனைவர் கணேஷ்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். இக்கூட்டத்தில், பாமக இளைஞரணியின் வளர்ச்சி, ஆண்டு செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

Related Stories: