ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் 2023ல் இதே கேள்விக்கு 5 ஆண்டுகளில் Tatkal வகுப்பு மூலம் ரூ.12,000 கோடி மற்றும் டிக்கெட் ரத்து கட்டணத்தை உள்ளடக்கிய இதர வருவாய் பிரிவில் ரூ.7,600 வசூல் என பதிலளித்த நிலையில், தற்போது பதில் மறுக்கப்பட்டுள்ளது.
