41 பேர் செத்து இருக்காங்க…குற்ற உணர்வு இல்லாம விஜய் டான்ஸ் ஆடுறாரு… ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் தவெக கட்சியே நடக்குது

* வாங்குவது வெள்ளையா? கருப்பா? பொளந்து கட்டிய ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய், தொடர்ச்சியாக அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்து வருவதாக கேட்கிறீர்கள். யார் யாரை விமர்சனம் செய்வது என்றே விவஸ்தை இல்லை. விஜய் தெளிவுபடுத்த வேண்டும், அவர் வாங்குவது வெள்ளையா? கருப்பா? அப்படியென்றால் கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு? வருமான வரி எவ்வளவு செலுத்தி இருக்கிறார்? இன்றைக்கும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அது வேறு விஷயம்.

அதற்குள் நான் போக விரும்பவில்லை. அப்படி ஒரு கறுப்பு, வெள்ளை… இப்படியெல்லாம் வாங்கியது சமூகத்துக்கு கேடு இல்லையா? உண்மையில் கை சுத்தம், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்றால், ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக, ‘நான் இவ்வளவுதான் வாங்குகிறேன். இவ்வளவு வரி கட்டி இருக்கிறேன்’ என்று அவரால் சொல்ல முடியுமா? விஜய்யால் சொல்ல முடியாது. கருப்பு அதிகம், வெள்ளை குறைவு. அப்படியென்றால் வரி, அதுவும் குறைவு.

அது வரி ஏய்ப்பு இல்லையா? அப்படியென்றால் யார் யாரை விமர்சனம் செய்வது? அதற்கு ஒரு அருகதை வேண்டும்.
விஜய் பக்கத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா யாரு? லாட்டரியில் செல்வம் குவித்தவர் தான் அவர். அவருடைய வீட்டில் போய் விஜய் சாப்பிடுகிறார். பாவப்பட்ட எவ்வளவோ பேருடைய ரத்தத்தை சுரண்டி கொழுத்தவருடைய வீட்டில் போய் சாப்பிடுகிறார் விஜய். சரி அப்படியே இருந்தால்கூட சரி. இன்றைக்கு விஜய் நடத்துகிற கட்சி யாருடைய பணத்தில் நடக்கிறது? லாட்டரி பணத்தில் தான் விஜய் நடத்தும் கட்சியே இன்றைக்கு நடக்கிறது.

நாட்டில் இன்றைக்கு பார்த்தால் 41 உயிர்கள் கரூரில் அன்றைக்கு போயிருக்கிறது. அது ஒரு மிகவும் மனம் வேதனைப்படக்கூடிய சம்பவம் ஆகும். ஆனால் கொஞ்சம் கூட ஒரு குற்ற உணர்வு இல்லாமல், 3ம் ஆண்டு கட்சி துவக்க விழாவில் டான்ஸ் ஆடுகிறார் என்றால், அந்த 41 குடும்பங்கள் எந்த அளவுக்கு மனகஷ்டப்படும் என்று அனைவரும் தயவுசெய்து நினைத்துப்பார்க்க வேண்டும்.

ஒரு ஈவு இரக்கம் இல்லாத, தவெக தலைவராக இருப்பதற்கு உண்மையில் அருகதை இல்லாதவர் என்றுதான் நான் சொல்வேன். தலைவருக்கே உள்ள அந்த அருகதை கிடையாது. 41 குடும்பங்கள் அந்த டான்சை பார்த்தால் அவர்கள் மனது எவ்வளவு கஷ்டப்படும். அதை பற்றி ஏதாவது பேசி இருக்கிறாரா விஜய். அதுபற்றி எதுவும் பேசவில்லை. நானும் ரவுடி தான் என்பது போல விஜய் பேசுகிறார். ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் தவெக கட்சியே நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

* விசில் எதுக்கு?
‘‘ஒட்டுமொத்தமாக பார்த்தால், தவெகவை பொறுத்தவரை பார்த்தால் முழுக்க முழுக்க விசில். விசில் எதற்கு அடிப்பாங்க? ஆபத்தில் இருக்கும்போதுதான் விசில் அடிப்பாங்க. ஹெல்ப்… ஹெல்ப்… என்று. டைட்டானிக் படம் பார்த்தால் தெரியும். கடைசியில் கிளைமாக்ஸ் பாத்திக்கீங்களா?விசில் அடிக்கிறதுதான், ஆபத்து என்பதுதான். அவருக்கும் ஆபத்து, கட்சிக்கும் ஆபத்து. ஆபத்து என்றால் என்ன? ஆதரவு இல்லாததுதான் ஆபத்து. யாரையும் காப்பாத்த விசில் கிடையாது. ஆபத்தில் இருந்து எங்களை காப்பாத்துங்கள் என்பதுதான் விசில்’’ என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories: