சென்னை: 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு வருகிற பிப்ரவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை பனையூர் 8வது அவென்யூவில் உள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், பிப்ரவரி 6ம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல் மனுக்களை பெறலாம் எனவும், இதர நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்குமாறு தமிழக வெற்றி கழகம் தலைமை நிலைய செயலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
