பாஜ சார்பில் விருப்ப மனு வாங்குவது இல்லை யார் யார் வேட்பாளர், எந்த தொகுதி என்பதை தலைமை முடிவு செய்யும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: பாஜ சார்பில் விருப்ப மனு வாங்குவது இல்லை. யார், யார் வேட்பாளர், எந்த தொகுதி என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: தமிழக பாஜவில் உள்ள எல்லா நிர்வாகிகளையும் 6 தொகுதிகளுக்கு சென்று ஆராய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதில் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இடம்பெற்று இருந்தார்.

அண்ணாமலை தனது தந்தையாரின் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.தமிழக பாஜவை பொறுத்தவரை யாரும் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பு குழு கூடி முடிவு எடுக்கும். அதைபோல தான் சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பாஜ எப்போதுமே விருப்பமனு வாங்குவது இல்லை. யார், யார் வேட்பாளர், எந்த தொகுதி என்பதை எங்கள் தலைமை முடிவு செய்யும்.

அவர்கள் அறிவிப்பார்கள். அதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஓபிஎஸ்சை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என எடப்பாடி சொல்லியிருக்கிறார். அது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அதை அவங்க பேசி முடிக்க வேண்டியது. அதை பற்றி நாம் நாம சொல்ல முடியாது. என்டிஏ கூட்டணியில் அவரை கொண்டு வருகிறோமா என்பதை எங்களுடைய அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்க போவதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

சசிகலா புதிய கட்சி தொடங்க போறேன் என்று சொல்லியியுள்ளதையும் அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் வருவது பற்றி தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஈபிஎஸ் முடிவு செய்வார். நாங்கள் ஸ்டிராங்கான கூட்டணி. எங்களுக்கு அவர்(விஜய்) வந்து சேரனும் என்பது முக்கியமா என்பது இரண்டாவது விஷயம். முன்னாள் கவர்னர் தமிழிசை சொன்ன மாதிரி விஜய் வந்தால் அவருக்கு நல்லது. தமிழ்நாட்டிற்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: