சீர்காழி என்கவுன்டர் சம்பவம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு

கும்பகோணம், ஜன.30: கும்பகோணம் அடுத்த சோழபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதான வீதியிலும், சாலை சந்திப்புகளிலும் சோழபுரம் அனைத்து வணிகர் நலச் சங்கம் சார்பில் நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சோழா மகேந்திரன் தலைமை வகித்தார். திருவிடைமருதூர் டிஎஸ்பி அசோகன், சோழபுரம் அனைத்து வணிகர் நல சங்க தலைவர் முகமது சுகைல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரமைப்பு மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை நிலைய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் மாவட்ட செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியாதவது: சமீப நாட்களாக தமிழகத்தில் திருட்டு, வழிபறி, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொலை மற்றும் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை கைது செய்து விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணையை துரிதப்படுத்தி மூன்று மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். சில தினங்களுக்கு முன் சீர்காழியில் நகைவியாபாரி வீட்டுக்குள் புகுந்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை சூழ்நிலை காரணமாக என்கவுன்டர் செய்ததை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்கிறது என்றார்.

Related Stories: