அரியலூர் பொறியாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜன. 30: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பொறியாளர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களின் ஊதிய பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணியாற்றும் பொறியாளர்களுக்கும் அரசுத் துறை பொறியாளர்களுக்கு இணையாக 6வது ஊதியக் குழு ஊதியத்தை நிர்ணயித்து, அதற்கினையான 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் அக்கூட்டமைப்பைச் சேர்ந்த நடராஜன், ராஜா, இளையபிரபு ராஜன், முரளி, தினேஷ், பிரகாஷ், ராஜலட்சுமி, நகராட்சித் துறையைச் சார்ந்த மதன்குமார், நீர்வள ஆதாரத்துறையைச் சேர்ந்த மருதமுத்து, பத்மாதேவி, திவ்யபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

 

Related Stories: