கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் வட்டாரம், இருதுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், இன்று (22ம் தேதி) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்டு மற்றும் கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம் போன்ற 17 வகையான சிறப்பு நிபுணர்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்களுக்கு இலவச அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனைகள், இருதய பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
- ஸ்டாலின் திட்ட சுகாதார மருத்துவ முகாம்
- கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- கலெக்டர்
- தினேஷ் குமார்
- இருதுக்கோட்டை பஞ்சாயத்து
- யூனியன்
- நடுத்தரப் பள்ளி
- கீழமங்களம்
