சிவகங்கை மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தில் 144 குழந்தைகள் பயன்

சிவகங்கை, ஜன.30: தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அன்புக் கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 6,052 குழந்தைகள் பயன் பெறும் வகையில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் பெற்றோரை இழந்து, உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, அக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றளனர். மேலும் அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, 18வயது வரை மாதம் ரூபாய் 2,000உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 144குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு, அதற்கான அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: