திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருவாரூர்,ஜன.29: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக நாளையும், நாளை மறுதினமும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாயில் பழுது ஏற்ப்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணி காரணமாக நாளையும் (30ந் தேதி), நாளை மறுதினமும் (31ந் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: