மெய்நின்ற நாதர் கோயில் சிவராத்திரி விழா ஆலோசனை கூட்டம்

அறந்தாங்கி, ஜன.29: அறந்தாங்கி அருகே கீரமங்கலம் சிவன் கோயிலில் சிவராத்திரி நடத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்று கீரமங்கலத்தில் உள்ள மெய்நின்ற நாதர் சிவன் கோயிவில். இந்த கோயிலில் ஆண்டு தோறும் சிவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் வரும் 15-ந் தேதி மகாசிவராத்திரி திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து நடப்பாண்டும் கீரமங்கலம் சிவன் கோவிலில் மகாசிவராத்தி திருவிழா சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கோயில் அறங்காவலர் சக்கரவர்த்தி மற்றும் கணேசன், சின்னராச, செந்தில் வீரம்மா கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: