எங்கள் வான்பரப்பின் வழியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டம்!!

அபுதாபி: எங்கள் வான்பரப்பின் வழியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரானை சுற்றி உள்ள பகுதிகளில் அமெரிக்காவின் போர் கப்பல்கள், விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் ஈரான், அமெரிக்கா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பினர் களமிறங்கி உள்ளனர். செங்கடல் வழியாக அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் பிற கப்பல்கள் சென்றால் அதனை தாக்குதவற்கு ஹவுதி பிரிவினர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் ஈரானில் இண்டர்நெட் வசதிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று குற்றம்சாட்டி இஸ்ரேல் ஈரானை தாக்கியது. அப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அதிரடியாக தாக்கியது. அப்போதும் கமேனி சுரங்கம் ஒன்றில் பாதுகாப்பாக பதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானை தாக்க அமெரிக்க படைகள் அந்நாட்டின் அருகே குவிக்கப்பட்டுள்ள நிலையில் யு.ஏ.இ. இவ்வாறு அறிவித்துள்ளது.

Related Stories: