குகேஷ் மீண்டும் தோல்வி

விஜ்ஆன்ஸீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், ஜெர்மன் கிராண்ட் மாஸ்டர் மாத்தியாஸ் புளுபாமிடம் தோல்வியை சந்தித்தார். நெதர்லாந்தின் விஜ்ஆன்ஸீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் 9வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஜெர்மன் கிராண்ட் மாஸ்டர் மாத்தியாஸ் புளுபாம் மோதினர்.

இத்தொடரில் தடுமாற்றத்துடன் ஆடி வரும் குகேஷ், புளுபாமிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். கடந்த 4 போட்டிகளில் குகேஷ் அடையும் 3வது தோல்வி இது. புளுபாம், மேலும் ஒரு சுற்றில் வெற்றி பெற்றால், தன் வாழ்நாளில் முதல் முறையாக ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியில் ஆட தகுதி பெறுவார்.

Related Stories: