தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா

கரூர், ஜனவரி. 28: தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். விழாவில் பள்ளி முதல்வர் ஜெயசித்ரா குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் இளவழகன், ஆசிரியைகள் துளசிமணி, சுகந்தி, சரண்யா, வனிதா மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Related Stories: