நாட்டின் 77 வது குடியரசு தின விழா: சிதம்பரம் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்த தீட்சிதர்கள்

 

கடலூர்: நாட்டின் 77-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் உள்ள 142 அடி உயர ராஜகோபுரத்தில் தேசிய கொடியை ஏற்றி பொது தீட்சிதர்கள் மரியாதை செய்தனர். முன்னதாக நடராஜருக்கு பால், நெய்வேத்தியம் முடித்த பின்பு நடராஜர் சிவகாமசுந்தரி தயாரிப்பு மகா தீபாரதனை காமிக்கப்பட்ட பின்பு தேசியக்கொடியை நடராஜர் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தேசிய கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுர பகுதியில் உள்ள ராஜா கோபுரத்தில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினத்தை கொண்டாடினர்.

Related Stories: