அவிநாசி, ஜன.20: போயம்பாளையத்தில் இருந்து வந்த டாடா ஏசி வேனில் குப்பைகளை நிரப்பிக் கொண்டு வந்த ஓட்டுநர் வலசுபாளையம் பிரிவு பனங்காடு அருகே குப்பைகளை கொட்டினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தைப் சிறைபிடித்தனர். பின்னர் அந்த வாகனத்தை பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அந்த குப்பைகளை கொண்டு வந்த கொட்டிய வாகனத்திற்கு ரூ.8000 அபராதமாக விதிக்கப்பட்டது.
