பாலக்காடு, ஜன. 20: கேரள- தமிழக எல்லையான வாளையார் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி வந்த கார் ஒன்றை போலீசார் தடுத்து சோதனையிட்டனர்.
அதில் காரின் சீட்டிற்கு அடியில் ரூ.1.18 கோடி ஹவாலா பணம் பதுக்கி வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காரில் வந்தவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
தொடர்ந்து போலீசார் அவரை வாளையார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர் தெலுங்கானாவைச் சேர்ந்த சவான் ரூபேஷ் (30) என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ஹவாலா பணம் கடத்திய சவான் ரூபேஷ் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
