நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியமனம்

 

மஞ்சூர், ஜன.20: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் புதியதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்படி நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக டி.நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மஞ்சூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக கட்சி பணியாற்றி மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் நீலகிரி மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜூக்கு குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மஞ்சூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: