வேளாண் பல்கலைக்கழக மாணவிகளுக்கு கிராம வரைபடம் தயாரிக்கும் பயிற்சி

ஈரோடு,ஜன.26: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவிகள் கிராம வளர்ச்சி மற்றும் வேளாண் பணிகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் கிராம வரைப்படம் தயாரிக்கும் பயிற்சியில் நேற்று முன் தினம் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம்,பவானி வட்டம், புன்னம் கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சியில், மாணவிகள் கிராமத்தின் தினசரி செயல்பாட்டு அட்டவணை,பாசன வசதிகள்,குடியிருப்பு பகுதிகள்,சாலைகள், விவசாய நிலங்கள்,கால்நடை வளங்கள் மற்றும் சமூக வசதிகள் போன்ற விவரங்களை வரைப்படமாக பதிவு செய்தனர்.

மேலும், கிராமத்தில் உள்ள இயற்கை வளங்கள்,தண்ணீர் ஆதாரங்கள்,சுகாதார வசதிகள், போக்குவரத்து நிலை, தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து கிராம மக்களுடன் கலந்துரையாடி தெரிந்து கொண்டனர். இந்த பயிற்சியின் மூலமாக கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து திட்டமிடத் தேவையான அடிப்படை அறிவு, சமூக தொடர்பு திறன் மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான ஆய்வு முறைகள் போன்றவை குறித்து அனுபவம் பெற்றனர்.

 

Related Stories: