ஈரோடு,ஜன.26: பாட்டாளி பொது தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. சங்க செயலாளர் முனியப்பன் தலைமை வகித்தார். தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். பாமக மாநகர் மாவட்ட செயலாளர் ராஜூ, மாநகர் மாவட்ட தலைவர் பிரபு, மாநில துணை தலைவர் பரமசிவம், கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்க ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் குருசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக ரங்கன், செயலாளராக முனியப்பன், பொருளாளர் தினேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். சங்க உறுப்பினர்கள் அனைவரையும் நல வாரியத்தில் இணைக்க வேண்டும்.இச்சங்கம் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
