ஈரோடு, ஜன. 20: ஈரோடு, செங்குந்த நகர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவரது தனது தோட்டத்தில் மாடு, ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பால் கறக்க வந்போது அங்கிருந்த கன்றுக்குட்டி குடல் சரிந்த பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தது.
கூட்டமாக தோட்டத்துக்குள் புகுந்த தெருநாய்கள் கன்றுக்குட்டியை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து சண்முகம், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் பார்வையிட்டு விசாரித்தனர்.
