அந்தியூரில் ரூ.22 லட்சம் ஏலச்சீட்டு மோசடி

 

 

ஈரோடு, ஜன. 20: அந்தியூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.22 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்தியூர் பேரூராட்சி 1வது வார்டு தூய்மை பணியாளர்கள் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பர்கூர் கிராமம், தேவர்மலையை சேர்ந்த சதீஷ், அவரது பெரியப்பா போலப்பன் ஆகியோர் எங்களுக்கு ஏலச்சீட்டு நடத்தி ரூ.22 லட்சம் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரவேண்டும் என்றனர்.

Related Stories: