குடும்ப தகராறில் தீக்குளித்து தொழிலாளி பலி

 

ஆவடி, ஜன.20: குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
ஆவடி அடுத்த திருநின்றவூர் சுதேசி நகர் பவானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாராயணன்(46), கொத்தனார் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு, தனது மனைவி பார்வதியிடம் வெந்நீர் கேட்டார். அப்போது, பார்வதி வெந்நீர் கொடுக்கவில்லையாம். இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை தனக்கு தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பார்வதி தீக்காயமடைந்த நாராயணனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருநின்றவூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: