கூடப்பாக்கத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

திருவள்ளூர், ஜன.23: பூந்தமல்லி ஒன்றியம், புதுச்சத்திரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் நோய் நிகழ்வாழ்வியல் இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தியது. முகாமிற்கு திருவள்ளூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் தாமோதரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நோய் நிகழ்வாழ்வியல் முதன்மை ஆராய்ச்சியாளர் கனக சுசிலா கலந்துகொண்டு, சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இதில், கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குநர் சுபஸ்ரீ, உதவி மருத்துவர்கள் பிரேம்குமார், கருணாநிதி, நதியா, லோகநாதன், சத்திய பிரியா, கால்நடை ஆய்வாளர்கள் மோகன்ராஜ், ரமேஷ், முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரபு, ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர், சுமார் 600 பசு மாடுகள், 100 எருமை மாடுகள், 300 செம்மறி ஆடுகள், 500 வெள்ளை ஆடுகள், 25 நாய்கள், 120 கோழிகள் ஆகியவற்றிற்கு பரிசோதனை மேற்கொண்டு தடுப்பூசியினையும், சினை ஊசினையும் செலுத்தினர். மேலும் கருவூட்டல், குடற்புழு நீக்கம் ஆகியவற்றிற்கு பரிசோதனை மேற்கொண்டு, மருந்துகளை வழங்கினர். முகாமில் சிறப்பாக கால்நடைகளை பராமரிப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகளை, உதவி இயக்குநர் தாமோதரன் வழங்கினார்.

Related Stories: