திருவள்ளூர் அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

 

திருவள்ளூர், ஜன.20: திருவள்ளூர் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் அருகே உள்ள பட்டரைபெருமந்தூர், நாராயணபுரம் ஆகிய இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீசார் குன்னவலம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது அங்கு இருந்த நபர் குடி போதையில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். போலீசார் அவரை எச்சரித்தும் செல்லாமல் தொடர்ந்து அவ்வாறு ஈடுபட்டு வந்தார்.
இதனைத்தொடர்ந்து, போலீசார் அங்கு குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்(37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: