காஞ்சிபுரத்தில் இருளர் இன மக்களுக்கு பட்டா கேட்டு கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

 

காஞ்சிபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில், இருளர் இன மக்களுக்கு பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் இ.லாரன்ஸ் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் தங்கராஜ், செல்வம், ஞானவேல், தேவி, சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பி.வி.சீனிவாசன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம், காஞ்சிபுரம் தொகுதி செயலாளர் ஜெ. கமலநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் எஸ்.வி.சங்கர், மாவட்ட குழு உறுப்பினர் வேங்கையன், தொகுதி குழு உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில், திருப்புக்குழி கிராமம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டாவில் ஒருஇடமும், வழங்கப்பட்டது வேறு இடமுமாக உள்ளது. இதனால் இருளர் இன மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வருவாய்த்துறையின் குளறுபடியை கண்டிப்பது, மேலும் பட்டா கொடுத்த இடத்தை அளந்து இருளர் இன மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

Related Stories: