திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆதவ் அர்ஜூனாவை கண்டித்து ரஜினி ரசிகர்கள் சார்பில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவதூறாக பேசி உள்ளார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரை கண்டித்து ரஜினி ரசிகர்கள் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘‘வன்மையாக கண்டிக்கின்றோம் ஆதவ் அர்ஜூன் அவர்களே, மன்னிப்பு கேளு… ரஜினியை விமர்சனம் செய்பவர்கள் கதி அதோ கதி, உன் சாம்ராஜ்ஜியத்தில் இது எழுதப்படாத விதி, நல்லதே செய்வோம் ரஜினி பக்தர்கள்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
