நாகர்கோவில்- மங்களூரு அம்ருத் பாரத் உள்பட 4 புதிய ரயில்களை இன்று தொடங்கி வைக்கிறார் மோடி

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இன்று திருவனந்தபுரம் வருகிறார். இன்று காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வரும் அவருக்கு விமான நிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பிறகு திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக நடைபெறும் ரோட் ஷோவிலும் அவர் பங்கேற்கிறார். புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருவனந்தபுரம்- தாம்பரம், நாகர்கோவில்- மங்களூரு, திருவனந்தபுரம்- ஐதராபாத் ஆகிய 3 அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் திருச்சூர்-குருவாயூர் பயணிகள் ரயில் ஆகிய 4 புதிய ரயில்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் தமிழ்நாடு செல்கிறார்.

Related Stories: