திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கான சிறப்பு முகாம்

திருவாரூர்,ஜன.21: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கான சிறப்பு முகாம் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் நாளை (22ந் தேதி) மற்றும் நாளை மறுதினம் (23ந் தேதி) திருவாரூர், நன்னிலம், வலங்கைமான், குடவாசல், முத்துப்பேட்டை, மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஆகிய வட்டங்களில் புதிரை வண்ணார் சமூகத்தினர் பயனடையும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி நாளை (22ம்தேதி) திருவாரூர், வலங்கைமான் மற்றும் மன்னார்குடி ஆகிய தாலுகா அலுவலகங்களிலும், முத்துப்பேட்டை தாலுகாவில் இருந்து வரும் கிராம நிர்வாக அலுவலகங்களிலும் இந்த சிறப்பு முகாமானது நடைபெறுகிறது. மேலும் நாளை மறுதினம் (23ம்தேதி) நீடாமங்கலம், நன்னிலம் மற்றும் குடவாசல் ஆகிய தாலுக்கா அலுவலகங்களில் இந்த முகாமானது நடைபெறவுள்ள நிலையில் இதில் புதிரை வண்ணார் சமூக மக்கள், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் இல்லாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாளில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: