திருவாரூரில் 13வது நாளாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்

திருவாரூர்,ஜன.21: காலமுறை ஊதியம் வழங்கிட கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திருவாரூரில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், காலை சிற்று£ண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும், மாநிலம் முழுவதும் இருந்து வரும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும், பட்டப்படிப்பு முடித்துள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும், பணிகாலத்தில் இறந்த ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு கருணை அடிபடையிலான பணி வழங்கிட வேண்டும், பணிகொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் தாலுகா போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

Related Stories: